கிருஷ்ண ஜெயந்தியில் கொள்ளை அழகில் ராதையாக ஜொலித்த காஜல் அகர்வால்- வைரல் புகைப்படம்!
காஜல் அகர்வால்..
நாடு முழுவதும் கிருஷ்ணரின் பிறந்தநாளாக நேற்று கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி வந்தனர். பல திரைப்பிரபலங்களும் குடும்பத்துடன் கொண்டாடி புகைப்படத்தையும் வெளியிட்டனர்.
திருமணத்திற்குப் பிறகு தற்போது தமிழிலும் தெலுங்கிலும் சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’, ‘கோஷ்டி’, ‘கருங்காப்பியம்’ உள்ளிட்டப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.
அதேசமயம், வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்துகிறார். இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி குங்குமப்பூ மற்றும் வெள்ளை நிற உடையில்
கையில் புல்லாங்குழலுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் புன்னகையுடன் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் கொள்ளை அழகில் ராதையாகவே ஜொலிக்கிறார் என புகழந்து வருகின்றனர்.