Top AD

Breaking News

நமீதா போல் கொழு கொழுக்குன்னு மாறிய பிக்பாஸ் கேப்ரியலா ! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் !

கேப்ரியலா...

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கேப்ரில்லா அங்க இருக்குற கேமை நன்றாக விளையாடுகிறார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பெரிதாக வாய்ப்பில்லாத நிலையில் Big Boss நிகழ்ச்சியில் நுழைந்து உள்ளார். பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது.

3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார். தற்போது மாடர்ன் உடைகளில் பிக் பாஸ் வீட்டில் அவர் வரும் காட்சிகள் மக்கள் மனதை சுண்டி இழுத்து வருகிறது.